இந்தியாவில் சாம்சங் கேலக்ஸின் M- சீரிஸ்(M-10,M-20) ஸ்மார்ட் போன்கள் நேற்று அறிமுகமாகியுள்ளது. பட்ஜெட் விலையில் பல விதமான புதிய வசதிகளை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ரெட்மிக்கு போட்டியாக சாம்சங் தரப்பில் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி M-10 மொபைல் 3400 mAh பேட்டரி, 6.2’in V- நாட்ச் டிஸ்பிலே மற்றும் எஸ்யனோஸ்(exynos) 7870 வுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும்

 • 2 ஜிபி ரேம் 16 ஜிபி உள்ளடக்க சேமிப்புள்ள இந்த மொபைல்
 • ரூ. 7990 /-க்கும்
 • 3 ஜிபி ரேம் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டது ரூ. 8990 /-க்கும்  விற்பனைக்கு வந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி M-10 விவரம்:

 • 6.22-inch (1520 × 720 pixels) HD+ 19.5:9 TFT டிஸ்பிலே
 • ஆக்டோ கோர்  எஸ்யனோஸ் ( Exynos ) 7870 14nm ப்ரோசசர்
 • மாலி-G71 GPU
 • 2 ஜிபி/3 ஜிபி ரேம்
 • 16 ஜிபி/32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு + 512ஜிபி  வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு
 • பின்பக்க கேமரா :  13MP கொண்ட,f/1.9 (aperture) உடன் 5 MP f/2.2 (aperture) கொண்ட (ultra-wide angle) அகல கோணம் கேமரா மற்றும் Led flash.
 • முன்பக்க  கேமரா : 5 MP f/2.0 துவாரம்(aperture)
 • அண்ட்ராய்டு 8.1 ஒரியோ
 • 3400 mAh பேட்டரி
 • இரட்டை சிம் கார்டுகள்,3.5 mm ஆடியோ ஜாக்,FM வானொலி
 • இரட்டை  4G வோல்ட்(volte),ப்ளூடூத் 5, GPS + GLONASS

அடுத்ததாக   சாம்சங் கேலக்ஸின் M-20 ஸ்மார்ட்போனானது 5000mAh கொண்ட மிக பெரிய பேட்டரி,    6.3’ in FHD+ V- நாட்ச் டிஸ்பிலே மற்றும் எஸ்யனோஸ் (exynos) 7904 வுடன் வெளியாகியுள்ளது.

 • 2 ஜிபி ரேம் 16 ஜிபி உள்ளடக்க சேமிப்புள்ள இந்த மாடல் மொபைல்கள் ரூ. 10990 /- என்ற விலையிலும்
 • 3 ஜிபி ரேம் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டது ரூ. 12990 /- என்ற விலையிலும் காணக்கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி M-20 விவரம்:

 • 6.3-inch (2340 × 1080 pixels) FHD+ 19.5:9 TFT டிஸ்பிலே
 • ஆக்டோ கோர்  எஸ்யனோஸ் 7904 14nm ப்ரோசசர்
 • மாலி-G71 GPU
 • 2 ஜிபி/3 ஜிபி ரேம்
 • 16 ஜிபி/32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு + 512ஜிபி  வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு
 • பின்பக்க கேமரா :  13MP கொண்ட,f/1.9 (aperture) உடன் 5 MP f/2.2 (aperture) கொண்ட (ultra-wide angle) அகல கோணம் கேமரா மற்றும் Led flash.
 • முன்பக்க  கேமரா : 8 MP f/2.0 (aperture)
 • அண்ட்ராய்டு 8.1 ஒரியோ
 • 5000 mAh பேட்டரி
 • இரட்டை சிம் கார்டுகள்,3.5 mm ஆடியோ ஜாக்,FM வானொலி
 • கைரேகை சென்சார் , face unlock
 • இரட்டை  4G வோல்ட்(volte ),ப்ளூடூத் 5, GPS + GLONASS

இந்த ஸ்மார்ட்போன்களின் முழு விவரம் பற்றி அறிய இந்த வீடியோவை பார்க்கவும்.

சாம்சங் கேலக்ஸி M-10 :https://www.youtube.com/watch?v=oFGW6OF5KUo

சாம்சங் கேலக்ஸி M-20 :https://www.youtube.com/watch?v=0lCJ4hviADg


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

CAPTCHA