கடந்த வார இறுதியில் (Redmi Go) ரெட்மி கோ ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் முழு விவரங்கள் ஆன்லைனில் வெளிவந்தது.இந்த ஸ்மார்ட்போனின் பெயரும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் , சில விவரக்குறிப்புகளையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

1280 x 720 பிக்சல்கள் கொண்ட 5 இன்ச் எல்சிடி(LCD) டிஸ்ப்ளே உள்ள இந்த ரெட்மி கோ ஸ்மார்ட்போன் ஒரு quad-core ஸ்னாப்டிராகன் செயலி மூலம் இயக்கப்படுகிறது என்று கூறுகின்றனர், ஆனால் அதன் பெயர் வெளிடவில்லை.இது ஸ்னாப்ட்ராகன் 425 என்று தெரியவந்தது.இதுபோல், ரெட்மி கோ யில் ரேம் எண்ணிக்கையையும் வெளிப்படுத்தவில்லை, ஆனால் 1 ஜிபி ரேம் இருக்ககூடும் என்று கசிந்துள்ளது.

புகைப்படங்களை வைத்து  பார்க்கும் போது, 8 MP பின்பக்க கேமராவையும் 5 MP முன்பக்க   கேமராவையும் 3000mAh பேட்டரியையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

ரெட்மி கோ இல் இயங்கும் அண்ட்ராய்டு OS பற்றி. ரெட்மி இருந்து எந்த வார்த்தையும்  இல்லை, ஆனால், தொலைபேசியின் பெயர் மற்றும் விளம்பர ஹேஸ்டேக் மூலம் ” கோ ”  என்ற வார்த்தையிலிருந்து , அது அண்ட்ராய்டு கோ வில் ரன் ஆகலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இது அண்ட்ராய்டு 8.1 Oreo (go edition) கொண்டு  ரன் ஆகிறது என்று இந்த மொபைலின் விவரக்குறிப்பில் கசிந்துள்ளது.

ரெட்மி கோ விவரம்: *இன்னும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்

ப்ரோசசர்: ஸ்னாப்ட்ராகன் 425 quad-core ப்ரோசசர்
ரேம்: 1 ஜிபி
OS: அண்ட்ராய்டு 8.1 ஒரியோ
டிஸ்ப்ளே: 5-inch HD 1280 x 720 பிக்சல்கள்(LCD) டிஸ்ப்ளே
பின்பக்க கேமரா: Led flash கொண்ட 8 MP
முன்பக்க கேமரா: 5 MP
உள்ளடக்க சேமிப்பு: 8 ஜிபி
விரிவாக்கக்கூடிய சேமிப்பு: 128 ஜிபி(microSD card மூலம்)
சிம்: இரட்டை(2)
இணைப்பு: இரட்டை 4G வோல்ட்(volte),ப்ளூடூத் ,GPS
நிறங்கள் : கருப்பு,நீலம்
பேட்டரி: 3000 mAh


For the latest tech news, follow TamilTech on TwitterFacebookGoogle+, Instagramand subscribe to our YouTube channel.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

CAPTCHA