இந்த புதிய Asus ZenFone Max Pro M2 ஸ்மார்ட்போன் ,Zenfone மேக்ஸ் வரிசையில் நவீன வடிவமைப்பின்கீழ் மற்றும் அதிக சக்திவாய்ந்த உள்நிகழ்வுகளை கொண்டுள்ளது .Asus நிறுவனம் Zenfone மேக்ஸ் வரிசையில் நிலைத்தன்மையுடன் ,ஸ்டாக் அண்ட்ராய்டு OS இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

கொரில்லா கிளாஸ் 6, ஸ்னாப்ட்ராகன் 660 கொண்ட இந்த ஸ்மார்ட் போன் சென்ற ஆண்டின் இடைப்பட்ட காலத்திலிருந்து விற்பனையில் மினுமினுக்க தொடங்கியது.மேக்ஸ் புரோ M2 வேகத்தை தொடர்ந்து கொண்டிருக்குமா?

வடிவமைப்பு:

பட்ஜெட் விலையில் சிறந்த தோற்றமுள்ள மொபைல்களில் ஒன்றான இந்த ஸ்மார்ட்போன்,பின்புறமாக 3D கிளாஸ் ஐ கொண்டுள்ளதால் பார்ப்பதற்கு ஒரு பிரீமியமாக தெரிகிறது. வலது பக்கமாக volume rocker keys + Power button னும்,இடது பக்கமாக சிம் தட்டும்(இரட்டை 4G volte சிம்) விரிவாக்ககூடிய சேமிப்புமும் (2 TB வரை), கீழ்புறமாக மைக்ரோ- USB போர்ட் + முதன்மை மைக்ரோஃபோன் + 3.5mm ஹெட்போன் ஜாக் , ஒரு இரண்டாம்நிலை மைக்ரோஃபோனை மேல்புறமாக கொண்டுள்ளது.இதன் பக்கங்கள் வளைந்து காணப்படுவதால் கையில் பிடிப்பதற்கு வசதியாக உள்ளது.LED ப்ளாஷ் கொண்ட ஒரு இரட்டை கேமராவும், கைரேகை சென்சொர் பின்புற மையத்தில் அமைந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு எளிதாக உள்ளது. ஆச்சரியம் என்னவென்றால், அதன் பேட்டரி பெரியதாக இருந்தபோதிலும் மொபைல் மிகப்பெரியதாகவோ அல்லது பருமனாகவோ இல்லை.

டிஸ்ப்ளே:

19: 9 விகிதம் 6.26 inch IPS LCD டிஸ்ப்ளே + Full HD மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 6, மேல்புறமாக சிறிய நாட்ச் உடன் இந்த மொபைல் உள்ளது. மேலும் நமது விருப்பப்படி வண்ண வெப்பநிலையை சரி செய்யும் விருப்பத்தைக் கொண்டுள்ளது. அதனால், இதன் டிஸ்ப்ளே நல்ல பார்வை கோணங்களில் உள்ளது மற்றும் NTSC வண்ண வரம்பின் 94% கொடுக்கும் திறன் கொண்டது . நாட்ச்சை மறைக்கும் வசதி ஆப்சில் (manually) இல்லாததால், சில நேரங்களில் ஆப்ஸ் ஐ பயன்படுத்தும் போது எரிச்சலூட்டுகிறது.

கேமரா:

பின்பக்க கேமரா ( இரட்டை) :
i)முதல் கேமரா :12 MP+ LED Flash, Sony IMX486 sensor, PDAF, 1.25μm pixel size, f/1.8 aperture
ii)இரண்டாம் கேமரா : 5 MP (உருவப்படம் காட்சிகளின் ஆழமான தகவலைப் பிடிக்க)

முன்பக்க கேமரா : 13 MP + LED Flash,f/2.0 aperture

கீழே உள்ள கேமரா மாதிரிகளை பாருங்கள்:

இந்த மொபைலில் 30fps வரை 4K வீடியோக்களை பதிவு செய்யலாம், ஆனால் EIS 1080p வீடியோக்களுக்கு மட்டுமே கிடைக்கும். வீடியோவின் தரம் நன்றகாவே உள்ளது, இரண்டாம் நிலை மைக்ரோஃபோனைக் கொண்டிருப்பதால், ஆடியோவும் கேட்பதற்கு மிருதுவாக இருக்கிறது. Slow-motion வீடியோ பதிவு செய்ய முடியாது.

மென்/வன் பொருள் விவரங்கள்:

ஆக்டோ கோர் ஸ்னாப்ட்ராகன் 660 ப்ரோசசர் (Quad 2.2GHz Kryo 260 + Quad 1.8GHz Kryo 260 CPUs)வுடன் அட்ரீனோ 512 GPU,அண்ட்ராய்டு 8.1 ஒரியோவில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் மூன்று வேறுபாடுகளில் கிடைக்கிறது

i) 3 ஜிபி ரேம் / 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு ,
ii) 4 ஜிபி ரேம் / 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும்
iii) 6 ஜிபி ரேம் / 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு


மைக்ரோ SD கார்டு மூலம் 2TB வரை சேமிப்பை விரிபடுத்திக் கொள்ளலாம்.கைரேகை சென்சார் & Face Unlock வசதியும் உள்ளது.

பேட்டரி & செயல்திறன் :

5,000mAh கொண்ட பெரிய பேட்டரி என்பது இந்த மொபைலின் சிறப்பம்சங்களில் ஒன்று.ஆனால், விரைவாக சார்ஜசேரும் வசதி இல்லை.
இதன் செயல்திறன் மிருதுவாகவும் பாராட்டத்தக்கதாகவும் உள்ளது,ஏனென்றால் மொபைலை பயன்படுத்தும் போது பின்னடைவோ அல்லது செயலிழப்போ (ஹேங்) ஆகவில்லை. அது மட்டுமல்லாமல் , ப்ரோசசர் சக்தி வாய்ந்தாக இருப்பதால் PUBG, அஸ்பால்ட் மற்றும் சில கிராபிக்ஸ் கேம்-ஐ விளையாட போதுமானதாக இருக்கிறது. மேலும் இந்த மொபைலில் எந்த வெப்ப பிரச்சினையும் இல்லை.

நன்மைகள்:
i)அற்புதமான பேட்டரி
ii)நல்ல செயல்திறன்
iii) ஏற்புடைய பின்புற கேமராக்கள்
iv) இரட்டை 4G volte சிம் & மைக்ரோ SD கார்டு மூலம் 2TB வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு

தீமைகள்:
i) வேகமாக சார்ஜ் ஆவதில்லை.
ii) சுமாரான முபக்க கேமரா .

விலை விவரம் :
i) 3 ஜிபி ரேம் / 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு : ₹12,999
ii) 4 ஜிபி ரேம் / 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு : ₹14,999
iii) 6 ஜிபி ரேம் / 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு : ₹16,999

Buy here: http://fkrt.it/61BR62NNNN

இந்த மொபைலின் unboxing வீடியோ : https://www.youtube.com/watch?v=Uv-MlIHf1ro

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

CAPTCHA