சில மாதங்களுக்கு  முன்பு  பிஎஸ்என்எல்  நிறுவனம் புதிய மற்றும் ஏற்கனவே இருக்கும் சந்தாதாரர்களுக்கு இரண்டு விளம்பர FTTH பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இத்திட்டங்கள் 90 நாட்கள் என்று வரையறுக்கப்பட்ட காலமாக இருந்தபோதும்,நன்மைகள் பயன்படத்தக்க வகையில் உள்ளது;பயனர்கள், மாதத்திற்கு  750 ஜிபி டேட்டாவை பெற முடியும்.

முதலாவதாக, ரூ.777 திட்டம் – மலிவான ஃபைபர் மூலம் வீட்டிற்கு ,50 Mbps  வேகத்தில் 500 ஜிபி மாதாந்திர டேட்டாவை வழங்கும் வகையில் இந்த முகப்பு (FTTH) திட்டம்  உள்ளது. 500 ஜிபி வரம்பு மீறியவுடன்,அதன் வேகம் 2 Mbps க்கு குறையும் , ஆனால் பயனர்கள் தொடர்ந்து  வரம்பற்ற பதிவிறக்கங்களை செய்யலாம். மேலும் இந்நிறுவனம் வருடாந்திர கட்டணத்தில் தள்ளுபடியை வழங்குகிறது, அதன் படி பயனர்கள் 12 மாதங்களுக்கு 7,770 ரூபாயை  செலுத்த வேண்டும், அதாவது 10 மாதங்கள் மட்டுமே செலுத்த வேண்டும்;இரண்டு மாதங்கள் இலவசமாக கிடைக்கும்.

பயனர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு, 14,763 ரூபாய் செலுத்தினால் , 20 மாதங்களுக்கு  செலுத்தும் கணக்கில் , நான்கு மாதங்களுக்கு இலவசமாக பெறலாம், அதே போல், மூன்று ஆண்டுகளுக்கு 21,756 ரூபாய் செலுத்தினால், ஆறு  மாதங்களுக்கு இலவசமாகப் பெறலாம்.

இரண்டவதாக ரூ.1,277 திட்டம் – வாடிக்கையாளர்கள் 750 ஜிபி மாதாந்திர டேட்டாவை 100Mbps வேகத்தில்  பெற முடியும் . FUP ( Fair Usage Policy -நியாயமான பயன்பாடு கொள்கை ) அடைந்தவுடன் வேகம் 2 Mbpsல் குறையும், ஆனால் வரம்பற்ற பதிவிறக்கங்களைத் தொடர முடியும்.ரூ 777 திட்டத்தை போலவே, பயனர்கள் ஒரு வருடம், இரண்டு ஆண்டுகள் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு ரூ 12,770, ரூ 24,263 மற்றும் ரூ 35,756 முன்கூட்டியே செலுத்தி , ஆறு மாதங்கள்  இலவச பயன்பாட்டைப் பெறலாம்.

அந்தமான் மற்றும் நிக்கோபர் தவிர, இந்தத் திட்டங்கள் அனைத்து தொலைத் தொடர்பு வட்டங்களிலும் கிடைக்கின்றன. இந்தியாவில் எந்தவொரு நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற இலவச அழைப்புகளை இத்திட்டம் கொண்டுள்ளது. பயனர்கள் 1 ஜிபி ஸ்பேஸுடன் ஒரு இலவச மின்னஞ்சல் ஐடியையும்  பெறலாம்

கூடுதல் வீடியோ :

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

CAPTCHA