உலகின் முன்னணி மெசஞ்சர் செயலியான வாட்ஸ்அப் 2018 இல் ஸ்டிக்கர்களை அறிமுகப்படுத்தியிருந்தது, ஆனால் கடந்த மாதம்தான் அனிமேஷன் செய்யப்பட்ட ஸ்டிக்கர்கள் நடை முறைக்கு வந்தன. அனிமேஷன் செய்யப்பட்ட ஸ்டிக்கர்கள் கிராபிக்ஸ் துணையுடன் செயல்படுவதால், அவை வழக்கமானவற்றை விட அதிக சேமிப்பிடத்தை ஆக்கிரமித்து கொள்ளும். தற்சமயம், அனிமேஷன் ஸ்டிக்கர்கள் அதிக அளவில் தவறாக பயன்படுத்தப்படுகின்றனர்.இதை கட்டுப்படுத்த வாட்ஸ்அப் இதற்கான புதிய வரம்பை அறிமுகப்படுத்தியுள்ளது.அதன்படி, வரம்பை மீறினால் ஸ்டிக்கர்கள் எந்த தொடர்புகளுக்கும் அனுப்பப்படாது.
வாட்ஸ்அப் பீட்டாவைக் கண்காணிக்கும் ரசிகர் வலைத்தளமான WABetaInfo-ன் படி, வாட்ஸ்அப் செயலியில் எவ்வளவு பெரிய அனிமேட் ஸ்டிக்கர் கோப்புகள் இருந்தாலும் அதன் ஸ்டிக்கர் வரம்பு 1MB அளவிலானது, இருப்பினும், இது Android அல்லது iOS இயங்குதளத்தைப் பொறுத்து வரம்பு மாறுபடலாம்.சில பயனர்கள் “மோசமான ஸ்டிக்கர்களை” உருவாக்குவதையும் “பொறுப்பற்ற முறையில்” அனுப்புவதையும் தடுக்க கோப்பு அளவை கட்டுப்படுத்தியுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.இது நடைமுறையில் இருந்தாலும் அவற்றின் தாக்கம் வாட்ஸ்அப் பயனர்களுக்கு தெரியவில்லை.
அப்ளிகேஷன் ஸ்டோரில் ஒரு சில ஸ்டிக்கர் பேக் -ளை மட்டுமே சேர்த்து உலகளவில் ஜூலை 1 ஆம் தேதி வாட்ஸ்அப் அனிமேஷன் ஸ்டிக்கர்களை அறிமுகப்படுத்தியது. மக்கள் வாட்ஸ்அப்பில் தொடர்புகொள்வதில் வேகமாக வளர்ந்து வரும் வழிகளில் ஒன்று ஸ்டிக்கர்கள். ஒவ்வொரு நாளும் பில்லியன்கள் கணக்கில் ஸ்டிக்கர்கள் அனுப்பப்படுகின்றன. நாங்கள் புதிய அனிமேஷன் ஸ்டிக்கர் பேக் -ளை இன்னும் வேடிக்கையாகவும் வெளிப்பாடாகவும் வெளியிடுகிறோம்” என்று வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Bro super bro hatsoff to your hard work and I know that maintaining a channel is not a normal work and it needs hardwork
super bro