டிக்டாக் செயலிக்கு போட்டியாக வந்துவிட்டது பேஸ்புக்கின் லஸ்ஸோ செயலி !!

0
947

பிரபல சீன செயலியான டிக்டாக்கை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் செயலிக்கு போட்டியாக லஸ்ஸோ என்ற செயலியை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது.முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டுமே  அறிமுகம் செய்திருந்த இந்த லஸ்ஸோ செயலி இந்த ஆண்டு மே மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செயலியை வாட்ஸ்ஆப் செயலியுடன்  ஒருங்கிணைக்கும் பணிகளில் பேஸ்புக் ஈடுபட்டு வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகிருந்தது. அந்த வகையில் இந்தியாவில் இந்த செயலி  அறிமுகம் செய்யப்படும் போது, டிக்டாக் செயலிக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் முதல் சிங்கப்பூரில் உள்ள பேஸ்புக் குழு ஒன்று இந்திய வெளியீட்டிற்கு லஸ்ஸோ செயலியை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் டிக்டாக் வளர்ச்சிக்கு காரணமாக விளங்கியவற்றை அறிந்து கொள்ள பேஸ்புக் நிறுவனம் மூன்றாம் தரப்பு நிறுவனங்களின் உதவியுடன் ஆய்வில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

டிக்டாக்கிற்கு போட்டியை ஏற்படுத்தும் நோக்கில், லஸ்ஸோ சேவையில் இணைந்து கொள்ள கிரியேட்டர்கள் மற்றும் நட்சத்திரங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட லஸ்ஸோ சார்பில் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.அமெரிக்காவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட லஸ்ஸோ செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இதுவரை பல லட்சம் பேர் டவுன்லோடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் , லஸ்ஸோ செயலியை இந்திய தவிர இந்தோனிசியா போன்ற வளரும் சந்தைகளிலும் வெளியிட பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here