வெறும் 500 ரூபாயில் வெளியாகும் புதிய ஜியோபோன்!!

3
11374

ஜியோவின் புதிய  ஜியோபோன் 500 ரூபாயில் 4G இணைப்பு மற்றும் சமூக ஊடக பயன்பாடுகளுக்கான ஆதரவுடன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.      

 ரிலையன்ஸ் ஜியோ ஏற்கனவே குறைந்த விலையில் ஜியோபோன்களை இந்தியாவில் அறிமுகம் செய்திருந்த நிலையில் தற்போது ஜியோபோன் 5 பெயரில் புதிய மொபைல் போனை அறிமுகபடுத்தவுள்ளது. இந்த புதிய ஜியோபோன் 4G இணைப்பு மற்றும் சமூக ஊடக பயன்பாடுகளுக்கான அம்சங்களுடன்  வெளியாகும் என்றும் இது முந்தைய ஜியோபோனின் லைட் வெர்ஷன் என்றும்  கூறப்படுகிறது.

91 மொபைல்கள் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, இப்புதிய  ஜியோபோன் லைட் வெர்ஷன் என்பதால் விலையும் குறைவாகவே இருக்கும் , வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ,இதன் துவக்க விலை ரூ. 399 என எதிர்பார்க்கப்படுகிறது

முந்தைய மாடல்களில் இருந்ததை போன்றே புதிய ஜியோபோனிலும் வோல்ட்இ அழைப்புகளை மேற்கொள்ள முடியும் என தெரிகிறது.மேலும் இந்த போன் KaiOS-ல் இயங்கும் என்றும் வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கலாம். 

அதுமட்டுமல்லாமல், கூகுள் மற்றும் குவால்கம் நிறுவனங்களுடன் இனைந்து ஜியோவின் 5ஜி ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here