பிரபல குறுந்தகவல் செயலியான வாட்ஸ்அப்பில்((whatsapp) இதுவரை வாய்ஸ் (voice call) மற்றும் வீடியோ காலில் (Group video) அதிகபட்சமாக நான்கு பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும என்ற நிலை இருந்தது. தற்சமயம் இந்த வரம்பு எட்டு பங்கேற்பாளர்களுக்கு நீட்டித்துள்ளது.தற்போதைய காலக்கட்டத்தில் குரூப் வீடியோ கால் சேவைக்கான தட்டுப்பாடு அதிகரித்து இருக்கும் நிலையில் வாட்ஸ்அப், குரூப் கால் அம்சத்தில் மாற்றம் செய்ய இருக்கிறது.
அண்ட்ராய்டு மற்றும் iOS க்கான வாட்ஸ்அப்பின் சமீபத்திய பீட்டா புதுப்பிப்பு இந்த அம்சத்துடன் வருகிறது.
சமீபத்திய பீட்டா புதுப்பிப்பில் உள்ள வாட்ஸ்அப் பயனர்கள் இந்த அம்சத்தை சோதிக்கலாம். இது குரூப் வீடியோ(Group video) மற்றும் வாய்ஸ் அழைப்புகளைப் போலவே செயல்படுகிறது. நீங்கள் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட வாட்ஸ்அப் குழுவில் இருந்தால், நீங்கள் உட்பட எட்டு பேரைச் சேர்ப்பதன் மூலம் வாய்ஸ் அல்லது வீடியோ அழைப்பை மேற்கொள்ளலாம். பயனர்கள் குரூப் கால் செய்ய வாட்ஸ்அப் குரூப்சென்று உரையாட வேண்டியவர்களை தேர்வு செய்து அழைப்பை மேற்கொள்ளலாம். அழைப்பை மேற்கொண்டதும் வாட்ஸ்அப் குரூப் கால் அம்சத்தை இயக்கி விடும். இதுதவிர, பயனர்கள் கால்ஸ் டேப்(calls tab) சென்று பேச விரும்புவோரை தனித்தனியாக தேர்வு செய்து குரூப் கால் செய்யலாம்.
இருப்பினும் இது சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா புதுப்பிப்பைக் கொண்ட நபர்களுடன் மட்டுமே செயல்படும். விரைவில் இதற்கான ஸ்டேபில் அப்டேடை வழங்கப்படும் வாட்ஸ்அப் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Ini unga website follow aarambika vendiyadhudhaan another route for communication