வாட்ஸ்அப் மூலம் கடன், ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு சேவைகள்- விரைவில் வரக்கூடும்!!

0
1640

பேஸ்புக்கிற்குச் சொந்தமான பிரபல மெசேஜ்  நிறுவனமான வாட்ஸ்அப்,  இந்தியாவுக்கான தனது நிதிச் சேவை திட்டத்தின் மூலம் அடுத்த 18 மாதங்களில் பைலட் கடன், ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு சேவைகளை எவ்வாறு உருவாக்குவது என்பதை பற்றி விவரித்துள்ளது.

இந்தியாவில் வாட்ஸ்அப்  தலைவரான அபிஜித் போஸ் இந்த வார தொடக்கத்தில் குளோபல் ஃபிண்டெக் ஃபெஸ்ட்டில் வீடியோ அரட்டை(video chat at the Global Fintech Fest) மூலம் நிதி சேவை  திட்டத்தின்  விவரங்களை பகிர்ந்து கொண்டார். இதன் மூலம்  தற்போது குறைந்த ஊதிய தொழிலாளர்களுக்கு – அமைப்புசாரா துறைக்கு நிதி தீர்வுகளை வழங்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது. 300 மில்லியனுக்கும் அதிகமான சுயதொழில் செய்பவர்களுக்கு ரூ. 50, MSME வணிகங்களை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் அதன் தளம் வழியாக காப்பீட்டு சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வாட்ஸ்அப் அடிப்படையிலான சேவைகளைப் பயன்படுத்த இந்தியாவில் ஐ.சி.ஐ.சி.ஐ, கோட்டக் மஹிந்திரா, மற்றும் எச்.டி.எஃப்.சி உள்ளிட்ட பிரபலமான தனியார் வங்கிகளுடன் மெசேஜிங் ஏஜென்ட் ஏற்கனவே செயல்பட்டு வருவதாக போஸ் தெரிவித்துள்ளார். ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் கோட்டக் ஆகியவை கடந்த ஆண்டில் 3 மில்லியனுக்கும் அதிகமான புதிய பயனர்களை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.மேலும் அவர் நிறுவனம் பின்னர் “இணை முதலீடு மற்றும் அளவுகோல்(co-invest and scale)” திட்டங்களுக்கு  முழு அளவிலான சேவைகளை  வழங்கும்வதாகவும் கூறியுள்ளார்.

வாட்ஸ்அப்பில் ஏற்கனவே இந்தியாவில் 400 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டிருப்பதாகவும் , தனது யுபிஐ பேமென்ட்  சேவையின் மூலம் அதிகாரப்பூர்வ வெளியீட்டில் மேலும் 200 மில்லியன் பயனர்களை சேர்க்க முடியும் என்று தெரிவித்துள்ளது. நிறுவனம் இப்போது தரவு உள்ளூர்மயமாக்கல் கொள்கைகளை(data localization policies)  பின்பற்றுவதால் ,அதன் வெளியீட்டை தாமதமாகியுள்ளது , விரைவில் இது நடைமுறைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் மாதங்களில் ஜியோவின் சில்லறை வணிக விரிவாக்கத்திற்கு வாட்ஸ்அப்பின்  யுபிஐ சேவை பெரும் பங்களிப்பாக இருக்ககூடும் என்பதால் ,ஜியோமார்ட்டுடனான வாட்ஸ்அப் பே ஒருங்கிணைப்பு சாத்தியமானதாக இருக்கலாம்” என்று பெர்ன்ஸ்டீனின் அறிக்கை கூறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here