இனி மொபைல் யூடியூப் செயலியிலும் டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சம் !!

0
2443

கூகுளுக்கு சொந்தமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப் அதன் ஆண்ட்ராய்டு செயலியில் வீடியோ டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் நாம் வீடியோவில் வரும் ஆடியோவை வார்த்தைகளாக  காண  முடியும். 

இந்த அம்சத்தின் மூலம் வீடியோ நேரலையானதும், வீடியோக்களில் வரும் வசனம், வரிகளை தேடத்தேவையில்லை.வீடியோவின் விரிவாக்கப்பட்ட விளக்கத்திற்குக் கீழே காணப்படும் “டிரான்ஸ்கிரிப்டைக் காட்டு” என்ற பட்டனைக் கிளிக் செய்தால் முழு ஸ்கிரிப்டும் காட்டப்படும். அதில் நாம் தேவையான வார்த்தைகளை தேடி படிக்கலாம்.

தற்போது ஒரு சில ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டுள்ள இந்த அம்சம் விரைவில் அனைத்து யூடியூப் செயலிகளுக்குமே தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே யூடியூப் டெஸ்க்டாப் தளத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த அம்சம் தற்போது மொபைல் செயலியிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here