தற்போதுள்ள காலக்கட்டதில், இணையம் மிகவும் ஆபத்தான இடம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே…. குறிப்பாக உங்களின் நிதித் தரவைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பது அவசியம்.நீங்கள் பயன்படுத்தக்கூடிய பிரபலமான பயன்பாடு அல்லது சேவையுடன் இந்த நிதித் தரவு இணைக்கப்பட்டிருந்தால்,அதன் மூலம் ஹேக்கர்கள் மோசடி செய்யலாம்.
இது போன்ற மோசடி இப்போது உலகளவில் மிகவும் பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிக்ஸ்லிலும் அரங்கேரியுள்ளது. நெட்ஃபிக்ஸ் பிராண்ட் அங்கீகாரத்தைப் பயன்படுத்தி சந்தேகத்திற்கு இடமின்றி பயனர்களின் உள்நுழைவு சான்றுகள், பில்லிங் விவரங்கள் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களைப் பெற காட்சி விளைவுகளை நன்றாக நகலெடுக்கிறது(கீழே உள்ள படத்தில் காணக்கூடியது போல ).
இந்த நெட்ஃபிக்ஸ் மோசடி எவ்வாறு செயல்படுகிறது என்பதை கிளவுட் அலுவலக பாதுகாப்பு தளம்(Cloud office security platform) ஆர்மர்ப்ளாக்ஸ் (Armorblox )விவரிக்கிறது. அடிப்படையில், உண்மையான நெட்ஃபிக்ஸ் போல ஒரு மின்னஞ்சலைப் பெறுவதன் மூலம் இது தொடங்கும். உங்கள் பில்லிங் விவரங்களில் சிக்கல் இருப்பதாகவும் , நீங்கள் அஞ்சலில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்து இதை சரிசெய்யாவிட்டால் உங்கள் நெட்ஃபிக்ஸ் சந்தா இடைநிறுத்தப்படும் என்று ஒரு மின்னஞ்சல் பொதுவாக அனுப்பப்படும். இணைப்பைக் கிளிக் செய்தால் அசல் நெட்ஃபிக்ஸ் வலைத்தளத்தைப் போல தோற்றமளிக்கும் வலைத்தளத்திற்கு பின் உங்களை அழைத்துச் செல்லும் .
இதில் captcha stage-ம் உள்ளதால் , காண்பதற்கு அனைத்தும் உண்மையானதாகத் தோன்றும்.பின் உங்கள் நெட்ஃபிக்ஸ் கணக்கில் உள்நுழையவும், உங்கள் கிரெடிட் கார்டு விவரங்களையும் பில்லிங் தகவலையும் உள்ளிடவும் கேட்கப்படுவீர்கள்.மோசடி செய்பவர்களுக்கு இந்த தகவல்கள் கிடைத்ததும், அவர்கள் உங்களை உண்மையான நெட்ஃபிக்ஸ் வலைத்தளத்திற்கு திருப்பிவிடுவார்கள்.
இதுபோன்ற மின்னஞ்சல் தலைப்பு ‘Notice of Verification Failure’, எனவும் நெட்ஃபிக்ஸ் ஆதரவிலிருந்து வந்தது என்று வாசகர்கள் நம்பும் அளவிற்கு போதுமான இருக்கும் . மின்னஞ்சல் மொழி மற்றும் தலைப்பு அவசரத்தைத் தூண்டும் நோக்கமாக கொண்டதாகவும் , 24 மணிநேரத்திற்குள் தங்கள் விவரங்களை புதுப்பிக்காவிட்டால், வாசகரின் சந்தா ரத்து செய்யப்படும் என்று மின்னஞ்சல் கூறுகிறது, இது அவசர உணர்வை மேலும் அதிகரிக்கும், ”என்கிறார் ஆர்மர்ப்ளாக்ஸ்.
கிரெடிட் கார்டு விவரங்கள் உட்பட உங்கள் நிதி விவரங்களை தெரிந்து கொள்ள ஸ்கேமர்கள் பல்வேறு யுத்திகளை கையாளுகின்றன்றனர் .எனவே மின்னஞ்சல்கள் வழியாக உங்களுக்கு அனுப்பப்பட்ட இணைப்புகளைக் கிளிக் செய்வதிலிருந்து நீங்கள் விலகி இருக்க வேண்டும்,மேலும் மின்னஞ்சலை அனுப்பியவருக்கு – எழுத்துப்பிழைகள் மற்றும் முழு அனுப்புநரின் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றில் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும். ஒருவேளை , மின்னஞ்சலில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்தாலும், எந்தவொரு தகவலையும் பகிர்வதற்கு முன்பு, வலை உலாவியின்(website) மேற்புறத்தில் உள்ள முகவரிப் பட்டியில் உள்ள முழுமையான வலை முகவரியைக் கவனியுங்கள். அனைத்தும் உண்மையானதாகத் தோன்றினால், கேள்விக்குரிய உண்மையான வலைத்தளம் அல்லது பயன்பாட்டில் உள்நுழைந்து, மின்னஞ்சலில் சொல்லப்படுவது உண்மையில் உண்மையா இல்லையா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும்.