ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் மிகப்பெரிய ஆபத்து..! எச்சரிக்கை!!

- Advertisement -

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் குவால்காமின் ஸ்னாப்டிராகன் சிப் உலகளவில் 3 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. குவால்காமின் டிஜிட்டல் சிக்னல் செயலி( Qualcomm’s Digital Signal Processor (DSP))சிப்களில்  400 க்கும் மேற்பட்ட பாதிப்புகளை (vulnerabilities) CheckPoint பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இன்றைய சூழலிலுள்ள  ஸ்மார்ட்போன் சந்தையில்  40% க்கும் அதிகமான  ஸ்மார்ட்போன்களில்  குவால்காம் சிப்கள் பயன்படுத்தப்படுகின்றன. கூகுள், சாம்சங், எல்ஜி, சியோமி மற்றும் பல பிராண்டுகளின் பிரீமியம் தொலைபேசிகளும் வெவ்வேறு விலை வகைகளைச் சேர்ந்த தொலைபேசிகளும் இதில் அடங்கும். CheckPoint இந்த சிப்பை சோதித்து 400 க்கும் மேற்பட்ட பாதிக்கப்படக்கூடிய குறியீடுகளைக்(vulnerable pieces of code) கண்டுபிடித்துள்ளது. இத்தகைய குறியீடுகள்  ஹேக்கர்களை  பயனர்களின் தொடர்பு இல்லாமல் எந்த ஸ்மார்ட்போனையும் உளவு கருவியாக மாற்ற அனுமதிக்கும். புகைப்படங்கள், வீடியோக்கள், அழைப்பு பதிவுகள், நிகழ்நேர மைக்ரோஃபோன் தரவு, ஜி.பி.எஸ் மற்றும் இருப்பிடத் தரவு உள்ளிட்ட தரவை( real-time microphone data) ஹேக்கர்கள் இதன் மூலம் அணுகலாம்.

மேலும் ஹேக்கர்கள்  denial-of-service attack- ஐ பயன்படுத்தி தொலைபேசியை பயன்படுத்த முடியாதவாறு ஹேக் செய்யலாம்.இந்த வழியில் தொலைபேசியில் உள்ள எல்லா தரவும் நிரந்தரமாக கிடைக்கும். ஆபத்தான மற்றொரு விஷயம் என்னவென்றால், இந்த தொலைபேசிகளில் தீங்கிழைக்கும் மலிசியஸ் (malicious) குறியீட்டை ஹேக்கர்கள்  புகுத்தலாம்.

இந்த பாதிப்புகள் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதற்கான தொழில்நுட்ப விவரங்களை CheckPoint  வெளியிடவில்லை. தாங்கள் கண்டுபிடித்த ஆறு பாதுகாப்பு குறைபாடுகளை பற்றி குவால்காம்  நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது. ஆனால் அண்ட்ராய்டு தொலைபேசி பயனர்கள் முற்றிலும் பாதுகாப்பாக இருக்க, மொபைல் போன் விற்பனையாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களுக்கான பாதுகாப்பு திருத்தங்களை வெளியிட வேண்டியது அவசியம்.

அதிகம் படிக்கப்பட்டவை

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay on op - Ge the daily news in your inbox

[td_block_22 custom_title="தொழில்நுட்ப செய்திகள்" category_id="" ajax_pagination="load_more" m17_tl="30" block_template_id="td_block_template_3" f_header_font_size="25" tdc_css="eyJhbGwiOnsiYm9yZGVyLWNvbG9yIjoiI2U1ZTVlNSIsInNoYWRvdy1jb2xvciI6IiMwYTBhMGEiLCJkaXNwbGF5IjoiIn19" sort=""]