தரவு மீறல் காரணமாக பல சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது, அந்த செயலிகளில், ஃபைல்களை பகிரும் செயலியான SHAREit இருந்தது. காஷ்மீரைச் சேர்ந்த ஒரு இளம் டீனேஜ் சிறுவன்(17 வயது ) அஷ்பக் மெஹ்மூத் சவுத்ரி ஒரு புதிய ஃபைல்களை பகிரும் செயலியை Dodo Drop App உருவாக்கியுள்ளார்.
தடை காரணமாக பயனர்கள் நிறைய சிக்கல்களை எதிர்கொண்டனர். அதற்கு தீர்வாக இச்செயலியை உருவாக்கியதாகவும்,இதன் மூலம் பயனர்கள் ஆடியோக்கள், வீடியோக்கள், படங்கள் மற்றும் உரைகளை பகிர்ந்து கொள்ள முடியும் மற்றும் இதற்கு இணைய அணுகல் தேவையில்லை என்று அவர் ANI இடம் கூறியுள்ளார்.
இந்த செயலியை உருவாக்க நான்கு வாரங்கள் பிடித்ததாக அந்த டெவலப்பர் கூறியுள்ளார். இச்செயலி 480Mbps வரை பரிமாற்ற வீதத்தைக் கொண்டுள்ளது, இது SHAREit ஐ விட வேகமானது மற்றும் பயன்படுத்த எளிதானது. குறிப்பாக மாற்றப்படும் தரவு முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும் மற்றும் என்கிரிப்ட் செய்யப்படும் என அந்த சிறுவன் கூறியுள்ளார்.