பேஸ்புக் இன்க்(Facebook Inc) தனது இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் சேவைகளின் அரட்டை(chat) செயல்பாட்டை ஒன்றிணைக்கத் தொடங்குகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் ஆகிய இரண்டிற்குமான அரட்டை அமைப்புகளை ஒன்றிணைக்கும் விதமாக ஃபேஸ்புக் ஒரு புதிய புதுப்பிப்பை வெளியிடத் தொடங்கியுள்ளது.மேலும் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க், நிறுவனத்தின் அனைத்து செய்தி சேவைகளையும் ஒருங்கிணைக்கும் திட்டங்களை அறிவித்துள்ளார்.தி வெர்ஜின் அறிக்கையின்படி, இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள பயனர்களுக்கு அண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களில் இந்த புதுப்பிப்பு வரத் தொடங்கியுள்ளது.
இன்ஸ்டாகிராம் செயலியை திறக்கும்போது புதிய புதுப்பித்தலுடன் பாப்-அப் செய்தி தோன்றுவதை பயனர்கள் கவனிக்கலாம். இந்த புதுப்பிப்பில் அரட்டைகளுக்கான வண்ணமயமான தோற்றம், புதிய ஈமோஜிகள், swipe-to-reply மற்றும் பேஸ்புக்கில் சேர்க்கப்பட்ட நண்பர்களுடன் அரட்டை என நான்கு முக்கிய மாற்றங்கள் உள்ளன. இன்ஸ்டாகிராமில் அரட்டைகள் அனுப்புநரின் செய்திகளுக்குப் பயன்படுத்தப்படும் நீல மற்றும் ஊதா நிறங்களுடன் மிகவும் வண்ணமயமாக இருக்கும். சமீபத்தில், பேஸ்புக் மெசஞ்சர் வாட்ஸ்அப் வலை மற்றும் மொபைல் செயலி ஆகிய இரண்டிலும் இணைத்து , பயனர்கள் 50 நபர்களுடன் குழு அழைப்புகளை நேர வரம்பில்லாமல் அனுமதிக்கிறது. இந்த அம்சம் மே மாதத்தில் இன்ஸ்டாகிராமிலும் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.