இனி நீங்களே கூகுளில் உங்களுக்கான விசிடிங் கார்டை உருவாக்கலாம் !!

- Advertisement -

பிரபலங்கள், இணைய பிரபலமான நபர்கள் மற்றும் பிற பொருள் விஷயங்களுக்கான தகவல் அட்டைகளை கூகுள் தேடல் ஏற்கனவே உங்களுக்குக் காட்டுகிறது.ஆனால் அத்தகைய அம்சம்  நீங்கள் பின்பற்ற விரும்பும் உங்கள் சிறந்த நண்பருக்கோ அல்லது YouTube படைப்பாளர்களுக்கு இல்லை.

இன்று கூகுள்  People Card என்ற தேடல் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.”People Card  என்பது கூகுள் தேடலில் உருவாக்கக்கூடிய விர்சுவல் விசிடிங் கார்டு.ஆன்லைனில் கண்டுபிடிக்க விரும்பும் நபர்களுக்கும், தங்கள் வேலையைப் பகிர்ந்து கொள்ள விரும்புவோருக்கும் உதவும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.பயனர்கள் இப்போது , ஏற்கனவே இருக்கும் வலைத்தளம் அல்லது சமூக சுயவிவரங்களை முன்னிலைப்படுத்த தேடலில் ஒரு விர்சுவல் விசிடிங் கார்டை உருவாக்கலாம்.இந்த அட்டை உங்கள் பெயர், இருப்பிடம், தொழில் விவரம்  மற்றும் சமூக ஊடக இணைப்புகளைக் காண்பிக்கும்” என கூகுள் தனது அதிகாரப்பூர்வ வலைப்பதிவு இடுகையில் பதிவிட்டுள்ளது. இந்த அம்சத்தை நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக சோதித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் கூகுள் தற்போதைக்கு விரிவுபடுத்த விரும்பவில்லை.  மொபைலில் மட்டுமே கிடைக்கக்கூடிய  இந்த அம்சம் இப்போது வரை ஆங்கிலத்தில் மட்டுமே அணுக முடியும். ஒரு கூகுள்  கணக்கிற்கு ஒரே ஒரு People Card மட்டுமே நீங்கள் உருவாக்க முடியும், மேலும் அவற்றை உங்கள் தொலைபேசி எண் வழியாக அங்கீகரிக்க வேண்டும்.

எனவே, நீங்கள் கூகுளில்  தேடும்போது மற்றவர்கள் உங்களது People Card -ஐ பார்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், உங்களுக்காக People Card -ஐ  உருவாக்க கீழேயுள்ள படிகளைப் பின்பற்றவும்:

1  உங்கள் அன்ட்ராய்டு  தொலைபேசியில் உள்ள கூகுள் தேடல் பட்டியில், ‘add me to search’  என்று தட்டச்சு செய்து ,உங்களை கூகுள் தேடலில் சேர்க்கவும்.’ இந்த தேடல் முடிவில் உள்ள ‘தொடங்கு(Get Started)’ பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.

2 .பின் உங்கள் இருப்பிடம், வேலை விவரங்கள், வலைத்தள இணைப்பு, சமூக ஊடக இணைப்புகள் மற்றும் பல உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உள்ளிட வேண்டிய ‘உங்கள் பொது அட்டையை உருவாக்கு(Create your public card)’ பக்கத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள்.

/*இந்த செயல்முறை தனிப்பட்ட நபர்களின் அட்டைகளை உருவாக்குவதற்கானது மட்டுமே . தேடல் முடிவுகளில் வணிகங்கள் தொடர்பான  தங்கள் அட்டைகளைப் பார்க்க வேறு நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.*

3,எல்லா விவரங்களையும் உள்ளிட்டதும், தேடல் முடிவுகளில் உங்கள் ‘People Card’ எவ்வாறு தோன்றும் என்பதைக் காண கீழே உள்ள ‘முன்னோட்டம்(Preview)’ பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும் . விவரங்களில் நீங்கள் திருப்தி அடைந்தால், ‘சேமி(save)’ என்பதை அழுத்தவும், உங்கள் தகவல்கள் சில மணிநேரங்களுக்குள் கூகுள் தேடலில் காண்பிக்கப்படும்.

 கீழே இணைத்துள்ள படி,கூகிள் தானே முழுமையான  ‘People Card’ உருவாக்கும் செயல்முறையை எளிமையான GIF இல் காட்டியுள்ளது.

அதிகாரப்பூர்வ வலைப்பதிவு இடுகையின் படி, தொலைபேசி எண் சரிபார்ப்பைத் தவிர,  தேடல் நிறுவனமும் ‘தவறான அல்லது ஸ்பேமி(spammy) உள்ளடக்கத்திலிருந்து பாதுகாக்க பல வழிமுறைகளைக் கொண்டுள்ளது என்றும் குறைந்த தரமான தகவல்களையோ அல்லது இந்த அட்டை ஆள்மாறாட்டகாரரால் உருவாக்கப்பட்டது என்று அறிந்தால் நீங்கள் புகாரளிக்கலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேடல் முடிவுகளில் உங்கள் ‘People Card’ தோன்றுவதை நிறுத்த நீங்கள் எப்போதாவது முடிவு செய்தால், அதை எந்த நேரத்திலும் நீக்க முடியும்

அதிகம் படிக்கப்பட்டவை

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay on op - Ge the daily news in your inbox

[td_block_22 custom_title="தொழில்நுட்ப செய்திகள்" category_id="" ajax_pagination="load_more" m17_tl="30" block_template_id="td_block_template_3" f_header_font_size="25" tdc_css="eyJhbGwiOnsiYm9yZGVyLWNvbG9yIjoiI2U1ZTVlNSIsInNoYWRvdy1jb2xvciI6IiMwYTBhMGEiLCJkaXNwbGF5IjoiIn19" sort=""]