பயனர்களின் ரெஸ்யூம்களின் அடிப்படையில் அவர்களுக்கு பொருத்தமான வேலையை கண்டறிந்து அதற்கு விண்ணப்பிக்க உதவும் வகையில் கூகுள் Kormo Jobs என்ற செயலியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
2018-ம் ஆண்டு பங்களாதேஷிலும் மற்றும் 2019 -ம் ஆண்டு இந்தோனேசியாவிலும் ஏற்கனவே இந்த செயலி அறிமுகம் செய்யபட்டிருந்தது .கூகுள் முன்னதாகவே இந்தியாவில் தனது தேடுபொறி மூலம் வேலை தேடுபவர்களுக்கு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதேபோல் கடந்தாண்டு கூகுள் பே-வின் ஒரு பகுதியாக jobs spot மூலம் வேலை அம்சம் ஒன்றை உருவாக்கியது.இதன் மூலம் டன்சோ(Dunzo ) மற்றும் சொமாட்டோ(Zomato ) 20 மில்லியனுக்கு அதிகமான வேலை வாய்ப்புகளை பதிவு செய்ய முடிந்தது.இதை தொடர்ந்து தற்போது, நிறுவனம் இந்தியாவில் jobs spot-ஐ Kormo Jobs என்று மறுபெயரிட்டு, முழுமையான கோர்மோ செயலியை பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்ய வைக்கிறது.

இது வேலை தேடுபவர்களுக்கு இந்தியா முழுவதும் உள்ள வேலை காலியிடங்கள் கண்டுபிடித்து விண்ணப்பிக்க உதவுகிறது. மேலும் இது லிங்க்ட்இன், நாக்ரி மற்றும் டைம்ஸ்ஜோப்ஸ் ஆகியவற்றிக்கு போட்டியாக இருக்கும்.
இந்த செயலியில் சொந்தமாக ரெஸ்யூம்களை (CV ) உருவாக்க அனுமதிக்கிறது.பயனர்கள் தங்கள் குறிப்பிட்ட ஆர்வங்கள், திறன்கள் மற்றும் விருப்பமான இடங்களுடன் பொருந்தக்கூடிய வாய்ப்புகளைக் கண்டறிய இது நமக்கு உதவுகிறது
கொரோனா காலத்தில் வேலையிழந்து தவிக்கும் பலருக்கும் கூகுளின் இந்த செயலி பல்வேறு வகையில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது