அட்டகாசமான புதிய ஆண்ட்ராய்டு அம்சம் ..! நில நடுக்கத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் கூகுள் !!

- Advertisement -

பூகம்பம் ஏற்படுவதற்கு முன்னரே ஆண்ட்ராய்டு பயனர்களை எச்சரிக்கும் ஒரு புதிய அம்சத்தை உருவாக்கியுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு அடிப்படையிலான இந்த அம்சம் மக்களுக்குச் சரியான நேரத்தில் மற்றும் பயனுள்ள தகவல்களை வழங்கஉதவியாக இருக்கும்.

இந்த அம்சம் தற்போது முதல்கட்டமாக கலிபோர்னியாவில் வெளியிடப்படுவதாக கூகுள் தெரிவித்துள்ளது. இதன் மூலம் உங்களது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஒரு மினி Siesmometer-ராக செயல்பட்டு  நில அதிர்வு அளவீடுகளை ஆராய்ந்து பயனர்களுக்கு உதவ முடியும். 

மேலும்  அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களும்  பூகம்பம் நிகழக்கூடும் என்பதைக் குறிக்கும் சிக்னல்களை உணரக்கூடிய சிறிய accelerometers-டன் வருகின்றன.உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள இந்த கருவிகள் பூகம்பம் என்று நினைக்கும் அதிர்வைக் கண்டறிந்தால், அதை உடனே பூகம்பத்தைக் கண்டறியும் சேவையகத்திற்கு ஒரு சமிக்ஞையாக அனுப்புகிறது, இந்த மையம் அதை சரிபார்த்து உண்மையில் பூகம்பம் தானா என்பதை உறுதி செய்து எச்சரிக்கை செய்தியை அனுப்பும்.

ShakeAlert அமைப்பு, USGS, Cal OES, கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகம் மற்றும் கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியவற்றால் மாநிலம் முழுவதும் நிறுவப்பட்ட 700 க்கும் மேற்பட்ட நில அதிர்வு அளவீடுகளில் இருந்து சமிக்ஞைகளைப் பயன்படுத்துகிறது.பயனர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்திகளை வழங்குவதன் மூலம் பயனர்கள் அவர்களை பாதுகாத்துக்கொள்ள உதவியாக என்று நிறுவனம் கூறியுள்ளது.

பூகம்பத்தைக் கண்டறியும் இந்த அம்சம் இனி வரும் ஆண்டுகளில் உலகின் மற்ற நாடுகளில்  கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்  என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிகம் படிக்கப்பட்டவை

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay on op - Ge the daily news in your inbox

[td_block_22 custom_title="தொழில்நுட்ப செய்திகள்" category_id="" ajax_pagination="load_more" m17_tl="30" block_template_id="td_block_template_3" f_header_font_size="25" tdc_css="eyJhbGwiOnsiYm9yZGVyLWNvbG9yIjoiI2U1ZTVlNSIsInNoYWRvdy1jb2xvciI6IiMwYTBhMGEiLCJkaXNwbGF5IjoiIn19" sort=""]