ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோபோன் பயனர்களுக்கு UPI அடிப்படையில் கொடுப்பனவு தளத்தை(payment platform) உருவாக்க துவங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.இந்த சேவை தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது ஜியோபே(jiopay) ஒரு வருடத்திற்கும் மேலாக உள்நாட்டில் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி சில ஜியோபோன்களில் 1,000 பேரை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.ஆனாலும் இந்நிறுவனம் இந்த விஷயத்தில் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை
ஜூலை 2017 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோபோனில் ஸ்மார்ட் அம்சங்களுடன் தனது UPI கொடுப்பனவு சேவையை அதன் 4ஜி சார்ந்த தொலைபேசிகளுக்கு கொண்டுவர இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக முந்தைய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

BGR இந்தியா பகிர்ந்த ஸ்கிரீன் ஷாட்களின்படி, ஜியோபோனில் உள்ள ஜியோபே செயலி, Tap & Pay, Send Money, Recharge and Accounts போன்ற அம்சங்களை வழங்குகிறது. பயனர்கள் தங்கள் கட்டண வரலாற்றைக்(payment history ) காண ஒரு ஆப்ஷனும் (option ) உள்ளது
மேலும் Tap & Pay அம்சத்தை இயக்க, ஜியோபோனில் உள்ளமைக்கப்பட்ட NFC (Built in NFC) இல் பயன்பாடு பயன்படுகிறது.
கியோஸ் (KaiOS) அடிப்படையில் இயங்கும் ஜியோ தொலைபேசியில் ஜியோ பேயைக் கொண்டுவருவதற்காக யுபிஐ கட்டண பரிவர்த்தனை முறையை ஜியோ மறுசீரமைத்துள்ளதாகவும், ஆக்சிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, ஆர்.பி.எல் வங்கி, இண்டஸ்இண்ட், ஸ்டாண்டர்ட் சார்ட்டு, யெஸ் வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆகியவற்றில் தடையற்ற பணம் செலுத்துவதற்கு வழிவகுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
pro my jiophone update varuma