சீனாவின் Weibo, Baidu செயலிகளுக்கு இந்தியாவில் தடை..

- Advertisement -

பாதுகாப்பு மற்றும் தனியுரிமை பிரச்சினைகள் காரணமாக ஏற்கனவே இந்திய அரசாங்கம்  59 சீன செயலிகளை தடை செய்திருந்த நிலையில்,தற்போது மேலும் இரண்டு செயலிகளுக்கு தடைவிதித்துள்ளது

ட்விட்டர் மற்றும் கூகுள் தேடல் தளங்களுக்கு மாற்றாகவுள்ள பிரபல சீன செயலிகலான Weibo மற்றும் Baidu-க்கு இந்தியா தற்போது தடைவிதித்துள்ளது.மேலும் தகவல்களின்படி, கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து அகற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டைம்ஸ் ஆப் இந்தியா அறிக்கையின்படி, இணைய சேவை வழங்குநர்களுக்கும் இந்த இரண்டு பயன்பாடுகளையும் தடுக்குமாறு கூறப்பட்டுள்ளது. ஜூலை 27 அன்று இந்திய அரசு தடைசெய்த 47 புதிய பயன்பாடுகளில் வெய்போ மற்றும் பைடு தேடல்(Weibo, Baidu) ஆகியவை அடங்கும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரம் TOI இடம் கூறியதுடன், தடை செய்வதற்கான முடிவை அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும்  தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு வெய்போவில் ஒரு கணக்கு இருந்தது, ஆனால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் அவர் அதை மூடிவிட்டார்.ஏற்கனவே இந்திய அரசு  ஜூன் 29 அன்று 59 செயலிகளை ( TikTok Lite, Likee Lite, Bigo Live Lite, Shareit Lite, CamScanner HD, Hlo மற்றும் Mi கம்யூனிட்டி) தடை செய்ததை தொடர்ந்து இந்த 47 செயலிகளுக்குக்கான  தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இருப்பினும்,இந்த பட்டியலில் உள்ள செயலிகள் என்னென்ன என்பதை வெளியிடவில்லை.

47 செயலிகளைக்  கொண்ட இந்த இரண்டாவது பட்டியலில் உள்ள பெரும்பாலான செயலிகளில் டிக்டாக் லைட், ஷேரிட் லைட், கேம்ஸ்கேனர் HD, பயோலைவ் லைட், லைக் லைட்(TikTok Lite, Shareit Lite, CamScanner HD, BioLive Lite, Likee Lite ) போன்ற தடைசெய்யப்பட்ட 59 இன் ஒரு பகுதியாக இருந்த சில செயலிகளின் குளோன்கள்(clone) அல்லது லைட்(lite) பதிப்புகளும் அடங்கும்.

இந்த செயலிகள், “இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பாதகம் விளைவிக்கும் என்பதாலும், இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு ஆகியவற்றின்  சீரின்மைக்கு  காரணமாக அவை  தடை செய்யப்பட்டுள்ளன. PUBG மொபைல்(PUBG Mobile) மற்றும் பைட் டான்ஸின்(Byte Dance) Resso உள்ளடக்கிய மேலும் 275 சீன செயலிகளையும் அரசாங்கம் கவனித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் படிக்கப்பட்டவை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay on op - Ge the daily news in your inbox

[td_block_22 custom_title="தொழில்நுட்ப செய்திகள்" category_id="" ajax_pagination="load_more" m17_tl="30" block_template_id="td_block_template_3" f_header_font_size="25" tdc_css="eyJhbGwiOnsiYm9yZGVyLWNvbG9yIjoiI2U1ZTVlNSIsInNoYWRvdy1jb2xvciI6IiMwYTBhMGEiLCJkaXNwbGF5IjoiIn19" sort=""]