ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக ட்ரூகாலர் புதிய ஸ்பேம் செயல்பாட்டு குறிகாட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த செயல்பாட்டு காட்டி உங்கள் தொலைபேசியில் ஸ்பேம் அழைப்பாளரைப் பற்றிய கூடுதல் நுண்ணறிவுகளை பயனர்களுக்கு கொடுக்கிறது.
இந்த செயலிக்குள் ஸ்பேமரின் சுயவிவரப் படத்தைத் தட்டும்போது பயனர்கள் முழு விவரங்களை காணலாம். அழைப்பை எடுப்பதற்கு முன்பே ஸ்பேம் அழைப்புகளைப் பற்றி மேலும் அறிய இது உதவும்.

இப்போது, ஆண்ட்ராய்டு பயனர்கள் செயல்பாட்டு குறிகாட்டியிலிருந்து மூன்று முக்கிய விஷயங்களைக் காணலாம் – ஸ்பேம் அறிக்கைகள்( spam reports), அழைப்பு செயல்பாடு(call activity) மற்றும் உச்ச அழைப்பு நேரம்(peak calling hours)
ஒரு ட்ரூகாலர் பயனர் ஒரு குறிப்பிட்ட எண்ணை எத்தனை முறை ஸ்பேம் எனக் குறித்தார் என்பதை ஸ்பேம் அறிக்கைகள் காண்பிக்கின்றன (இது அறிக்கைகளின் படி அதிகரித்து வருகிறதா அல்லது குறைகிறதா என்பதையும் இது சதவீதத்தால் குறிக்கிறது).
அழைப்பு செயல்பாடு சமீபத்தில், வந்த எண்ணின் அழைப்புகளின் எண்ணிக்கையைக் காண்பிக்கும், இது ஸ்பேமரின் எண்ணிக்கை எவ்வளவு என்பதைக் குறிக்கும்.
உச்ச அழைப்பு நேரங்கள் என்பது ஸ்பேமர் எந்தெந்த நேரங்களில் ஆக்டிவ்வாக உள்ளார் என்பதை அடையாளம் காணும் நேர விளக்கப்படமாகும்
இந்த அம்சம் ,பயனர்கள் எதிர்காலத்தில் அழைப்பை மேற்கொள்வதற்கு முன் அது ஸ்பேம் அழைப்பா இல்லையா என்பதை அறிய முடியும்.இந்த சேவை தற்போது 240 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுக்கு கிடைத்துள்ளது.