வாட்ஸ்அப்பில் ஏற்கனவே பல புதிய அம்சங்கள் வந்த நிலையில் ,தற்போது பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த மெட்டா நிறுவனம் தொடர்ந்து பல விஷயங்களைச் செய்துகொண்டிருக்கிறது.
சமீபத்திய அறிக்கையின்படி, வாட்ஸ்அப் பயனர்கள் விரைவில் கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தி அரட்டைகளுக்குள் பணப் பரிமாற்றம் செய்ய அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது.வாட்ஸ்அப் நிறுவனம் , அமெரிக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுடன் இந்த புதிய கட்டண அம்சத்தில் வேலை செய்து வருகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த அம்சம் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட பயனர்களுக்கு ஆறு வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கு இந்த கட்டண அம்சத்தை கொண்டு வர, வாட்ஸ்அப் ஆனது டிஜிட்டல் வாலட் செயலியான Novi உடன் கூட்டு சேர்ந்துள்ளது .Paxos Trust Money ஆல் உருவாக்கப்பட்ட அமெரிக்க டாலர் பெக்ட் கிரிப்டோகரன்சியான Pax Dollars (USDP) ஐப் பயன்படுத்தி பயனர்கள் பணம் செலுத்த முடியும்.
இன்று முதல் அமெரிக்காவில் உள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் வாட்ஸ்அப்பில் உள்ள புதிய Novi கட்டண அம்சத்தைப் பயன்படுத்தி, அரட்டைகளுக்குள் உடனடியாகவும் தன்னிச்சையாகவும் பாதுகாப்பாகவும் பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும் என்றும், இது ஒரு செய்தியை அனுப்புவது போல குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பணம் அனுப்புவதை எளிதாக்குகிறது, என்றும் Novi இன் CEO, Stephane Kraisel ட்வீட் செய்துள்ளார். மேலும் அவர் “நாங்கள் நோவி பைலட் திட்டதில் இன்னும் ஆரம்பத்திலேயே இருக்கிறோம், எனவே இந்த புதிய நுழைவுப் புள்ளியை ஒரு நாட்டில் சோதனை செய்ய முடிவு செய்துள்ளோம், மேலும் இந்த புதிய அனுபவத்தைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நாங்கள் கேட்டவுடன் அதை நீட்டிக்க முயற்சிப்போம். ” என்றும், அரட்டைகள் இறுதி முதல் இறுதி வரை மறைகுறியாக்கப்பட்டதாக(end-to-end encrypted) இருப்பதால் வாட்ஸ்அப் இல் Novi ஐப் பயன்படுத்துவது அவர்களின் தனியுரிமை அமைப்புகளை பாதிக்காது என்பதையும் Kraisel உறுதி செய்துள்ளார்.
இதை பயன்படுத்துவது எப்படி?
1 முதலில் வாட்ஸ்அப்பில் நீங்கள் பணம் அனுப்ப விரும்பும் தொடர்பின் அரட்டையைத் திறக்க வேண்டும்.
2 நீங்கள் ஆண்ட்ராய்டு பயனராக இருந்தால், உரையாடல் பெட்டியில் உள்ள இணைப்பு ஐகானை தட்ட வேண்டும்.
3 நீங்கள் ஐபோன் பயனராக இருந்தால், அரட்டைப் பெட்டியில் உள்ள பிளஸ் ஐகானைத் தட்ட வேண்டும்.
4 பின் கட்டண விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
5.கட்டண விருப்பத்தைத் தேர்ந்தெடுத்ததும், நீங்கள் அனுப்ப விரும்பும் தொகையைச் சேர்க்க வேண்டும்

எந்தவொரு பரிவர்த்தனை தொகைக்கும் வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்குக் கட்டணம் வசூலிக்காது என்று நோவி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயனர்கள் எவ்வளவு வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும், பணத்தை அனுப்பலாம். இதற்கு வரம்பு கிடையாது.
இந்த WhatsApp Payments அம்சம் இந்தியா மற்றும் பிரேசிலில் மட்டுமே பயன்படுத்தக் கிடைக்கிறது. மேலும் இந்த அம்சத்தைக் கொண்ட மூன்றாவது நாடாக அமெரிக்கா இருந்தாலும்,இந்தியா அல்லது பிரேசிலில் உள்ள பயனர்கள் அமெரிக்காவில் உள்ள பயனர்களைப் போல கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தி பணம் அனுப்ப முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.