சமீபகாலமாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ரீசார்ஜ் பிளான் கட்டணங்களை 20 சதவீதம் வரை உயர்த்தி வந்த நிலையில், ரிலையன்ஸ் ஜியோ தற்போது சத்தமே இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் படி,1 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 100 MB டேட்டாவை வாடிக்கையாளர்கள் பெறுவார்கள். இதற்கான வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.இந்த வவுச்சரை பயன்படுத்தி 10 முறை ரீசார்ஜ் செய்தால் 30 நாட்களுக்கு தினசரி 100 எம்பி என்ற அடிப்படையில் 1 ஜிபி டேட்டாவை வெறும் ரூ.10க்கு பெறலாம். 100 எம்பி முழுவதும் தீர்ந்தபின்னர் இணைய வேகம் 64 Kbps ஆக குறைந்துவிடும்.
இந்த புதிய ரீசார்ஜ் திட்டம் MyJio ஆப்பில் உள்ள “பிற திட்டங்கள்(Recharge section)” டேப்பின் கீழ் “மதிப்பு(value)” பிரிவில் கிடைக்கிறது. ஆனால் இந்த அசத்தலான ரீசார்ஜ் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜியோ சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

