புவி வெப்பமயமாதலை தவிர்க்க எலோன் மஸ்க்கின் புதிய திட்டம் – சாத்தியமாகுமா ??

பல மில்லியன் கணக்கான மக்களின்  தொலைநோக்கு பார்வையாளராக கருதப்படுபவர் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க். உலகின் மிகப் பெரிய பணக்காரராக இருக்கும் இவருக்கு இப்போது புதிய எண்ணம் தோன்றியுள்ளது. அது அனைத்து கார்பன் டை ஆக்சைடையும் விண்வெளி எரிபொருளாக மாற்றுவதாகும். அவர் தனது ட்வீட்டில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் வளிமண்டலத்திலிருந்து CO2 ஐ எடுத்து ராக்கெட் எரிபொருளாக மாற்றுவதற்கான திட்டத்தைத் தொடங்குவதாகவும், இத்திட்டத்தில் சேர ஆர்வமுள்ளவர்களுக்கு உள்ளீடுகளுக்கு அழைப்பு விடுப்பதாகவும் கூறியுள்ளார். 

அடுத்த சில வருடங்களில் மனிதர்களை சிவப்பு கிரகத்திற்கு அழைத்துச் செல்லும் பணியில் மஸ்க் ஈடுபட்டு வருவதால், செவ்வாய் கிரகத்திற்கும் இந்த பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இந்த பணி எப்படி செயல்படுத்தப்படும் என்று தெரியவில்லை, ஆனால் இதுபோன்ற ஒரு கருத்தை ஒருவர் கொண்டு வருவது இதுவே முதல் முறை. நாம் நினைப்பது போல் செயல்படுத்தினால், காற்றில் உள்ள கரியமில வாயுவை ஒழிக்க இது உதவும். புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் இது பெரும்  உதவியாக இருக்கும் என்றும் மஸ்க் கூறியுள்ளார்.

எலோன் மஸ்க்,  கடந்த காலத்தில் இதுபோன்ற  யோசனைகளை செய்து முடித்து  நிரூபித்துள்ளார். இவர் ஒருமுறை, மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்வெளி ராக்கெட்டை உருவாக்குவதாகக் கூறினார், அது அதன் பணியை முடித்த பிறகு பூமியில் பாதுகாப்பாக தரையிறங்கும் – இது நடைமுறை படுத்தபட்டு  இப்போது ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 ராக்கெட் என்று அழைக்கப்படுகிறது. மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு, லாஸ் ஏஞ்சல்ஸில் (Los Angeles)உள்ள போக்குவரத்து குறித்து மஸ்க் ட்வீட் செய்திருந்தார், அதைத் தவிர்க்க, நகரத்தின் கீழ் ஒரு சுரங்கப்பாதை அமைக்கலாம் என்று கூறினார். இப்போது, லாஸ் வேகாஸ் நகரின் கீழ் ஒரு “லூப்” டியூன் செய்யப்பட்டுள்ளது, இது மஸ்க்கின் போரிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

தற்போது அவரது சிந்தையில் உருவாகியுள்ள இந்த, கார்பன் டை ஆக்சைடை விண்வெளி எரிபொருளாக மாற்றும் திட்டம் சாத்தியமாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். உங்களது கருத்து  என்ன ? 

Related Articles

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

152,177FansLike
152,873FollowersFollow
2,699,024SubscribersSubscribe
- Advertisement -spot_img

Must Read