இண்டர்நெட் இல்லாமல் இனி சாதாரண போனிலும் பணம் அனுப்பலாம்.. RBI அறிமுகப்படுத்திய புதிய வசதி!!

0
978

இந்தியாவில் இன்னும் Feature Phone எனும் கீபேட் கொண்ட  சாதாரண செல்போன்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளனர். இந்நிலையில், கீபேட் போன்களைப் பயன்படுத்தும் மக்களும் UPI பயன்பாட்டை உபயோகிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக ‘UPI- 123 Pay’என்ற சேவையை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தொடங்கி வைத்தார்.  

இந்தியாவில் 40 கோடி வாடிக்கையாளர்கள் சாதாரண செல்போன்களை  மட்டுமே பயன்படுத்துகின்றனர். அவர்கள் டிஜிட்டல் நவீனமயத்தில் பங்கேற்கும் வகையில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது  எனவும் மேலும் இந்த தொழில்நுட்பம், பில்லியன் சில்லறை பணப் பரிவர்த்தனைகளைக் கூடுதலாக செயல்படுத்தபடுத்த உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ‘UPI123 Pay’ சேவையில், சாதாரண போன் வைத்திருக்கும் பொதுமக்கள் வங்கிக்கு சென்று தங்களது செல்போன் எண்ணை  வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும். பின் டெபிட் கார்டு எண்ணை உள்ளீடு செய்து, யுபிஐ பாஸ்வேர்டு உருவாக்க வேண்டும். அதன்பிறகு பரிவர்த்தனை செய்யலாம்.

இந்த சேவையில் 4 வழிகளில் பணம் அனுப்பலாம்.

1 .  சாதாரண போன்களுக்கு என்று உருவாக்கப்பட்டிருக்கும் செயலியை பயன்படுத்தி பணம் அனுப்பலாம். 

2 . ஐவிஆர்(interactive voice call ) எண்ணுக்கு கால் செய்து அதில் யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ அவரது வங்கி எண் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்து பணம் அனுப்பலாம்.

3 . இதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள ஸ்பீக்கர் போன்ற கருவியை கொண்டு பணம் அனுப்பலாம். 

4. ஆர்.பி.ஐ கொடுத்திருக்கும் நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்தும் பணம் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையில் பணம் அனுப்புவது மட்டுமின்றி கேஸ் பில், மொபைல் ரீசார்ஜ் போன்றவற்றையும் செய்யலாம். வங்கிக் கணக்கில் இருப்பை சரி பார்க்கலாம், ஸ்மார்ட்போன் ஸ்கேன் அண்ட் பே செய்யப்படும் இடங்களிலும் கூட இந்த சேவை மூலம் பரிவர்த்தனை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்த விவரங்களை விரிவாக தெரிந்துகொள்ள பயனர்கள் www.digisaathi.info என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடலாம் அல்லது டிஜிட்டல் பணம் செலுத்துவது தொடர்பான சந்தேகங்களுக்கு 14431 மற்றும் 1800 891 3333 என்ற எண்ணை அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here