அடுத்ததாக இ-பார்மசியில் களமிறங்கும் ரிலையன்ஸ் நிறுவனம்…நெட்மெட்ஸில் 60% பங்குகளை வாங்கியது…!!

- Advertisement -

இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான்.காம் இன்க் இந்தியாவில் ஆன்லைன் மருந்து விற்பனை சேவையை அறிமுகப்படுத்திய சில நாட்களில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்  பிரபல ஆன்லைன் மருந்தக நிறுவனமான நெட்மெட்ஸில் சுமார் 6.2 பில்லியன் ரூபாய்க்கு (83.08 மில்லியன் டாலர்) முதலீடு செய்துள்ளது.

நெட்மெட்ஸ் என அழைக்கப்படும் வைட்டாலிக் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் 2015 இல் இணைக்கப்பட்டன. நெட்மெட்ஸ் என்பது உரிமம் பெற்ற இ-பார்மா போர்ட்டலாகும், இது அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை (ஓடிசி) மருந்தை இந்தியாவில் உள்ள பிற சுகாதார தயாரிப்பு நிறுவனங்களுக்கு  வழங்குகிறது.

ஏற்கனவே ரிலையன்ஸின் Jiomart ஆன்லைன் ஷாப்பிங் இ-காமர்ஸ் நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட்கு போட்டியாகவுள்ள நிலையில் தற்போது இ-பார்மசியில் அமேசான்க்கு போட்டியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சரின் இயக்குனர் ஈஷா அம்பானி கூறுயதாவது, நெட்மெட்ஸின் முதலீடு என்பது ரிலையன்ஸ் சில்லறை விற்பனையின் நல்ல தரமான மற்றும் மலிவு சுகாதார தயாரிப்புகளை வழங்குவதற்கான  நோக்கம் என தெரிவித்தார்.ஆன்லைன் மருந்து விற்பனை அல்லது மின் மருந்தகங்களுக்கான விதிமுறைகளை இந்தியா இன்னும் இறுதி செய்யவில்லை, ஆனால் ஆன்லைன் விற்பனையாளர்களான Medlife, Netmeds, Temasek-backed PharmEasy and Sequoia Capital-backed 1mg ஆகியவை பாரம்பரிய மருந்து கடைகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளன.

அதிகம் படிக்கப்பட்டவை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay on op - Ge the daily news in your inbox

[td_block_22 custom_title="தொழில்நுட்ப செய்திகள்" category_id="" ajax_pagination="load_more" m17_tl="30" block_template_id="td_block_template_3" f_header_font_size="25" tdc_css="eyJhbGwiOnsiYm9yZGVyLWNvbG9yIjoiI2U1ZTVlNSIsInNoYWRvdy1jb2xvciI6IiMwYTBhMGEiLCJkaXNwbGF5IjoiIn19" sort=""]