வாட்ஸ்அப்பிர்கு அடுத்த படியாக உலகம் முழுவதும் அதிகமாக பயன்படுத்தப்படும் செயலியாக டெலிகிராம் இருக்கிறது. இந்நிலையில் தற்போது இந்நிறுவனம் புதிய அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பல அம்சங்கள் உள்ள இச்செயலியில் டவுன்லோட் மேனேஜர், அட்டாச்மெண்ட் மெனு ,போன்நம்பர் லிங்க்ஸ் உள்ளிட்ட பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
டவுன்லோட் மேனேஜர்(download manager) : டெலிகிராம் ஏற்கனவே 2ஜிபி வரையிலான ஃபைல்ஸை ஷேர் செய்வதற்கு அனுமதி வழங்கியிருந்த நிலையில் தற்போது டவுன்லோட் மேனேஜர் என்ற புதிய அம்சத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் நாம் ஒரே நேரத்தில் எத்தனை ஃபைல்களை டவுன்லோட் செய்கிறோம் என்பதை காண முடியும், அதே நேரத்தில் எந்த ஃபைலை முதலில் டவுன்லோட் செய்ய வேண்டும் என்பதையும் தேர்வு செய்ய முடியும்.
credits to telegram
அட்டாச்மெண்ட் மெனு(attachment menu) : இந்த அம்சத்தின் மூலம் நாம் பல ஃபைல்களை ஒரே நேரத்தில் தேர்வு செய்து ஷேர் செய்ய முடியும். மேலும் இந்த அம்சத்தில் நாம் எந்த ஃபைல்களை சமீபத்தில் அனுப்பியிருக்கிறோம் என்பதையும் கண்காணிக்கவும், மேலும் அனுப்பிய ஃபைல்களை தேடி எடுக்கவும் முடியும்.
செமி டிராஸ்பெரண்ட் இண்டர்ஃபேஸ் (semi-transparent interface): ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு டெலிகிராம் செயலி சற்று டிரான்ஸ்பரண்ட் டிசைனையும் வழங்குகிறது.இந்த டிசைன் மூலம் நைட் மோடில் பேனல்கள் மற்றும் தலைப்புகளில் நுட்பமான வெளிப்படைத்தன்மையைக் காண இயலும், மேலும் நீங்கள் ஸ்க்ரோல் செய்யும் போது பின்னணியில் ஸ்டிக்கர்களையும் பார்க்கலாம்
credits to telegram
போன்நம்பர் லிங்க்ஸ்(PHONE NUMBER LINKS) : இந்த அம்சத்தின்மூலம் டெலிகிராம் பயனர்கள் இனி user name கொண்ட லிங்கினை உருவாக்க முடியும். இதனால் நாம் பிறருக்கு போன் நம்பர் தராமல் இந்த லிங்கை கொடுத்து டெலிகிராமில் தொடர்புகொள்ள செய்யலாம். லிங்க்கினை உருவாக்குவதற்கான ஃபார்மேட்: “t.me/+123456789.”

லைவ் ஸ்ட்ரீம்(Live streaming with other apps) : டெலிகிராமில் ஏற்கனவே அன்லிமிட்டட் நபர்களுக்கு நேரலை ஸ்ட்ரீமிங் செய்ய முடியும். ஆனால் தற்போது ஓபிஎஸ் ஸ்டூடியோ, XSplit Broadcaster உள்ளிட்ட ஸ்ட்ரீமிங் டூல்களை பயன்படுத்தியும் டெலிகிராமில் லைவ் ஸ்ட்ரீம் செய்ய முடியும். இதில் overlay, multi screen layout ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது.