அம்பலமாகிய டிக்டாக்-ன் விதிமீறல்!

- Advertisement -

குறுகிய காணொளிகளை உருவாக்கி பகிரும் சமூக வலைதளமான டிக்டாக் செய்த விதிமீறல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கிட்டத்தட்ட 15 மாதங்களாக டிக்டாக் நிறுவனம் அதன் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட விவரங்களை கூகுள் நிறுவனத்தின் விதிகளையும் மீறி சேகரித்தாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் டிக்டாக் செயலி அமெரிக்க அரசாங்கத்தை கண்காணிக்க சீன அரசிற்கு உதவியதாக கூறப்படுகிறது

தற்போது இந்தியாவை தொடர்ந்து வல்லரசு நாடான அமெரிக்காவும் டிக்டாக் செயலியை தடை செய்துள்ளது. இந்நிலையில் டிக்டாக் செயலி தனது ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்களின் MAC முகவரியை சேகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த வால் ஸ்ட்ரீட் நாளிதழ் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. MAC (Media Access Control) முகவரியை கொண்டு ஒவ்வொரு பயன்பாட்டாளர்களுக்கும் தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்களை (personalised ads) காட்ட உதவும். 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியான மேம்படுத்தலில் (update) இருந்து இந்த தகவல் சேகரிப்பு நிறுத்தப்பட்டதாகவும், தற்போது உள்ள செயலி (current version of TikTok app) பயன்பாட்டாளர்களின் MAC முகவரியை சேகரிப்பதில்லை எனவும் டிக்டாக் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனம் 2013-ம் ஆண்டு ஐபோன் பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவலான MAC முகவரியை மூன்றாம் தரப்பு மென்பொருள் நிறுவனங்கள் சேகரிப்பதை தடுப்பதற்கான பாதுகாப்பு வசதியை கொண்டுவந்தது. இந்த வசதியை கூகுள் நிறுவனம் 2015-ம் ஆண்டு கொண்டுவந்த போதிலும் அதில் உள்ள சில ஓட்டைகளை பயன்படுத்தி விதிமுறைகளை மீறி டிக்டாக் செயலி அதன் ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்களின் MAC முகவரியை சேகரித்துள்ளது. வால் ஸ்ட்ரீட் நாளிதழ் நடத்திய ஆய்வில் டிக்டாக் செயலி ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்களின் MAC முகவரியுடன் சேர்த்து வேறு சில தனிப்பட்ட தகவல்களையும் சேகரித்து அவற்றை பைட்டான்ஸ் (ByteDance) நிறுவனத்திற்கு அனுப்பியதாக தெரியவந்துள்ளது.

2018-ம் ஆண்டு கூகுளின் பாதுகாப்பு வசதியில் உள்ள இந்த ஓட்டையை பயன்படுத்தி கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள இணையதளத்தை பயன்படுத்தக்கூடிய மேலும் 350 செயலிகள் தங்கள் பயன்பாட்டாளர்களின் தகவல்களை சேகரித்து வைத்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த MAC முகவரியை கொண்டு ஒவ்வொருவரின் நடவடிக்கைகளையும் விளம்பரதாரர்கள் மற்றும் மூன்றாம் தரப்பு மென்பொருள் நிறுவனங்களால் தொடர்ந்து கண்காணிக்கமுடியும். இந்த பாதுகாப்பு வசதி குறைபாட்டை பற்றி தெரிந்தும் கூகுள் நிறுவனம் அதை இன்னும் சரி செய்யவில்லை என ஒரு ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகள் டிக்டாக் செயலியை தடை செய்துள்ள நிலையில் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் டிக்டாக் செயலியின் உலகளாவிய செயல்பாடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றன.

அதிகம் படிக்கப்பட்டவை

1 COMMENT

  1. realme 6i heating irruka please solunga pro😢😢😢😢😢😢😢😢😢😢🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️😢😢😢😢

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay on op - Ge the daily news in your inbox

[td_block_22 custom_title="தொழில்நுட்ப செய்திகள்" category_id="" ajax_pagination="load_more" m17_tl="30" block_template_id="td_block_template_3" f_header_font_size="25" tdc_css="eyJhbGwiOnsiYm9yZGVyLWNvbG9yIjoiI2U1ZTVlNSIsInNoYWRvdy1jb2xvciI6IiMwYTBhMGEiLCJkaXNwbGF5IjoiIn19" sort=""]